ராகுல், மு.க.ஸ்டாலினை கண்டால் மோடிக்கு பயம்- செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய விவகாரத்திற்கு பதில் அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “பிரதமர் மோடிக்கு இருவரை கண்டால் பயம், ஒருவர் ராகுல் மற்றொருவர் முதலமைச்சர் ஸ்டாலின். மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் மிகப்பெரிய பித்தலாட்டம் மற்றும் பொய் இருக்கிறது. பாஜக மற்றும் அதிமுகவுக்கு இரண்டு மாதங்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். எடப்பாடியை பாஜக ஆட்டிப்படைக்கிறது. பாஜக திட்டத்துக்கு இறையாகி விடக்கூடாது. ஆட்சியில் பங்கு இல்லை என முதல்வர் சொன்னது அவரது கருத்து. அவரது கட்சியின் கருத்து. தமிழ்நாட்டின் சூழல் பற்றி பேசியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும். எதிர்பார்ப்பு இருக்கும். அதை கூறுவது ஜனநாயகம். இறுதி முடிவை இரு கட்சிகளின் தலைமைகள் கூடி பேசி முடிவு செய்வார்கள். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிணக்கோ, சிக்கலோ இல்லை. காங்கிரஸ் வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை கண்டுக்காதீர்கள்” என்றார்.