×

கூட்டணி இழுபறி எதுவும் கிடையாது; பேசிக் கொண்டு இருக்கிறோம்- செல்வப்பெருந்தகை

 

அதிமுக கட்சியை விட்டு விடாமல் எடப்பாடி பழனிசாமி பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, “தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டமும் பயிற்சிமுகாமும் டெல்லியில் நடக்கிறது.  கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. கூட்டணி இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.  திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன கவலை இருக்கிறது. அதிமுக கட்சியை விட்டு விடாமல் பத்திரமாக பார்த்து கொள்ளு செல்லுங்கள். பா.ஜ.க ஆக்டோபாஸ் மாதிரி எல்லா கட்சிகளை விழுங்கி இருக்கிறது. அடுத்த விழுங்க போக இருக்கிற கட்சி அதிமுக. அதிமுகவை முக்கால் வாசி விழுங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் இருக்கும் கட்சியை விட்டு விடாமல். எடப்பாடி ப்ழ்னிச்சாமி பாதுகாப்பாக வைத்து கொள்வதே பெரிய விசயம். 

அதிமுக கூட்டணி மேடை ஏறிவிட்டார்கள் என்கிறீர்கள். கார்ல் மாக்ஸ் சிலை திறப்பு விழாவில் கூட்டணி தலைவர்களும் கைகோர்ந்து இருந்தோம். 18ந் தேதி எல்லாரும் சேர்ந்து மத்திய பா.ஜ்.க். ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.  மதுரையில் பா.ம.க சேர்ப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். பிற கட்சிகளின் பிரச்சனைகளில் காங்கிரஸ் மூக்கை நுழைக்காது. இதை தவறாக பதிவு செய்து உள்ளனர். ஆனால் அது போல் எதுவும் சொல்லவில்லையே. கூட்டணிக்கு தமிழ்நாடு தலைவராக உள்ள முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.  நாடாளுமன்றத்தில் தான் ஜனநாயகம் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். பேச விடமாட்டோம் என்பது சர்வாதிகாரம். நாடாளுமன்ற பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தந்து உள்ளனர்.  100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம். கட்சி மேலிடம் பேசி கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்றார்.