×

"திமுக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை"- செல்வப்பெருந்தகை

 

திமுக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “திமுக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை . கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன்  கூட்டத்தில் தெரிவித்தனர் . தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் கோரிக்கை  என்னவென்றால் உடனடியாக பேச்சுவார்த்தைக்குழு அமைக்க வேண்டும். அதிருப்தி என்று எதுவும் இல்லை; ஆனால் பேச்சுவார்த்தை  சீக்கிரம் முடிந்தால் நல்லது.

எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது தெரிந்தால்தான் தேர்தலுக்கு தயாராக முடியும். கூட்டணி பேச்சுவார்த்தை தாமதத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதித்தோம்.  திமுக பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது. பீகார், ராஜஸ்தான் தேர்தல்களில் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்ததால் சங்கடம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றை செய்ய உரிய நேரம் எங்களுக்கு தேவை. எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது. கூட்டத்தில் பேசிய தகவல்கள் குறித்து நாளை முதல்வரிடம் பேசுவோம். ராகுல்காந்தி, கார்கே உள்ளிட்டோரின் பயண திட்டங்கள் தயார். நாங்கள் தயார். திமுக தியாரா?” என்றார்.