×

"அறிவாலயத்தின்" பெயரை என்னவென்று மாற்றப் போகிறீர்கள்? - ரூபி மனோகரன் 

 

திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் அறிக்கையை குறிப்பிட்டு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் நேரு பெயரை நீக்கியிருக்கிறார்களே... காங்கிரஸ் கட்சிக்கு மானம், ரோஷம் இல்லையா?  'விஜய் போற்றி' பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிக்கொள்ளுங்கள்; கதர் கிழிஞ்சா தைக்க முடியாது காங்கிரஸ்காரனை திருத்த முடியாது என திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், “திமுகவும் அதன் செய்தித் தொடர்பாளர்களும் முதலில் தங்களின் கடந்த காலக் கொள்கை விளக்கக் குறிப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும். நேரு, அம்பேத்கர் பெயர்கள் எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. உங்கள் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கொள்கை விளக்கக் குறிப்பைப் படிக்கும்போது அவையிலேயே தூங்கிக் கொண்டு இருந்தீர்களா?சத்தியமூர்த்தி பவனைப் பற்றிக் குறை பேசவும், பெயர் மாற்றச் சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நேருவையும் அம்பேத்கரையும் வசதியாக மறந்துவிட்டு, தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும் அவர்களைக் கையில் எடுக்கும் உங்கள் "அறிவாலயத்தின்" பெயரை என்னவென்று மாற்றப் போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.