"தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்" - ராகுல் காந்தி பேட்டி
Aug 1, 2026, 17:50 IST
தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி நிறைவுநாளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது, ஆதரிப்போர் எட்டப்பர்கள். தொகுதி மறுவரையை எந்த அரசியல் கட்சிகளும் ஆதரிக்க கூடாது. தொகுதி மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்துவிடும். தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு மக்களும், அரசியல் கட்சியினரும் வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டை தொகுதி மறுவரையறை கடுமையாக பாதிக்கும். இது மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சனை. தமிழக மக்களின் அதிகாரத்தை பறிப்பதற்காகவெ மத்திய அரசு தொகுதி மறுவரையறையை கொண்டுவந்துள்ளது. மக்களின் வாக்குகளை பறிக்கவே இந்த மசோதாவை பாஜக கொண்டுவருகிறது” என்றார்.