×

உண்மையான GDP வளர்ச்சி என்ன?- காங்கிரஸ் கேள்வி

 

ஏப்ரல்-ஜூன் 2026 காலாண்டில் 7.8% வளர்ச்சி ஏற்பட்டதாக மோடி அரசு முன்வைத்த நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட GDP புள்ளிவிவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

நடப்பு ஏப்ரல் - ஜூன் காலாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8% என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தக் புள்ளிவிவரம் வெறும் கணக்கு வித்தை என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. கடந்த ஏப்ரல் - ஜூன் 2025 காலாண்டின் அடிப்படை ஜிடிபி மதிப்பு ₹86 லட்சம் கோடியிலிருந்து ரூ.80 லட்சம் கோடியாக 4 முறை குறைக்கப்பட்டுள்ளது. ஒப்பீடு செய்யப்படும் அடிப்படை ஆண்டின் அளவைக் குறைப்பதன் மூலம், நடப்பு ஆண்டின் வளர்ச்சி தானாகவே அதிகமாகக் காட்சியளிக்கும் என்று முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்கின் கணக்கீட்டை மேற்கோள் காட்டி காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், FY2022-23 முதல் கடந்த 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் தலா ரூ.8 லட்சம் கோடி முதல் ரூ.12 லட்சம் கோடி வரை ஜிடிபி மதிப்பீடு குறைக்கப்பட்டு, மொத்தம் ரூ.43 லட்சம் கோடி அளவுக்குப் பொருளாதாரத்தின் அளவு குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.