இன்ஸ்டாகிராமில் இணைந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி..!
Oct 23, 2026, 08:00 IST
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவரான சோனியா காந்தி, முதல்முறையாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் இணைந்துள்ளார்.
@soniagandhi என்ற தனது புதிய கணக்கில் முதல் பதிவாக அவரது சுயசரிதை புத்தகமான 'Belonging: A Journey of Love' குறித்த பார்வையும், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில், சோனியா காந்தி தனது புத்தகத்தின் முதல் பிரதிகளை பெற்றுக்கொள்வதும், மகள் பிரியங்கா காந்தியுடன் இனிப்பை பகிர்ந்துகொண்டு கட்டித்தழுவும் உணர்ச்சிகரமான தருணங்களும் இடம்பெற்றுள்ளன.