ராகுல் கைதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
ராகுல் காந்தி கைதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நீட் முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பதவி விலகக்கோரி டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பனகல் மாளிகை அருகே தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் விஸ்வநாதன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். ராகுல் காந்தி கைதைக் கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.