மீண்டும் தேர்தல் வந்தால் தவெக 200+ இடங்களில் வெல்லும்- ஜோதிமணி
மீண்டும் தேர்தல் வந்தால் த.வெ.க. 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.
தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் குறித்தும், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி ஜோதிமணி, “தவெக அரசுக்கான ஆதரவை ஆலோசனை கூட்டத்தில் உறுதியாக தெரிவித்தோம். தற்போது ஊழலற்ற, வெளிப்படையான, மதச்சார்பற்ற அரசு செயல்படுகிறது. அதற்காக முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்தோம். அனைவரையும் ஒருங்கிணைப்பது பற்றி பேசினோம். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. அது தவறான செயல். மீண்டும் தேர்தல் வந்தால் த.வெ.க. 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும். கூட்டணி கட்சிகள் சொல்லுவதை த.வெ.க.வினர் காது கொடுத்து கேட்கின்றனர். மற்ற கட்சி போல் சங்கடப்படுவதில்லை. தவெவுடன் இணைந்து பயணிப்போம். இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர் முடிவு செய்வார்கள்.” என்றார்.