×

விஜய்யை விடாமல் துரத்தும் காங்கிரஸ்

 

விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் சந்திப்பு நடத்தியுள்ள சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 தினங்களுக்கு முன் சென்னையில் தலைவர் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தார். ராகுல் காந்தியின் பிரதிநிதியாக விஜய்யை சென்று சந்தித்து சென்றார் பிரவீன் சக்ரவர்த்தி. பட்டினப்பாக்கத்தில் உள்ள தலைவர் விஜய் வீட்டில் சந்த சந்திப்பு நடைபெற்றது. காங்கிரஸில், ராகுல்காந்தி புதிதாக துவங்கிய data analyst பிரிவின் தலைவராக செயல்பட்டுவருபவர் பிரவீன் சக்ரவர்த்தி. 

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன், காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். நண்பர் என்ற முறையில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரை சந்தித்ததாக திருச்சி வேலுசாமி தெரிவித்துள்ளார்.