"விஜய் காங்கிரஸில் இணைய விரும்பினார்"- மாணிக்கம் தாகூர்
ஒரு காலத்தில் விஜய் காங்கிரஸில் சேர வேண்டும் என்று விரும்பினார், சனியன் பிடித்த காங்கிரஸ் தலைவர்கள் தான் சேர விடாமல் பண்ணிவிட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "திமுகவை ஜெயிக்க வைத்து முதல்வராக்கியது காங்கிரஸ்தான். நம்முடைய ஆதரவு இல்லாமல் அவர்கள் என்றும் ஆட்சி அமைத்தது கிடையாது. சாமிக்குப் பயப்படுகிற ஒரு முதலமைச்சர் ரொம்ப காலத்திற்குப் பிறகு வந்துள்ளார். சாமிக்குப் பயப்படாதவன்தான் பெரும் திருடனாக இருக்கிறான். அவர்கள்தான் பள்ளி, நூலகம் என அனைத்திலும் கொள்ளையடித்துள்ளனர். ஒரு காலத்தில் விஜய் காங்கிரஸில் சேர வேண்டும் என்று விரும்பினார், சனியன் பிடித்த காங்கிரஸ் தலைவர்கள் தான் சேர விடாமல் பண்ணிவிட்டார்கள். அதேபோன்று 2026 தேர்தலிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி சேர விஜய் விரும்பினார். ஆனால் அதனை காங்கிரஸில் இருந்த சில தலைவர்கள் எதிர்த்தனர். தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி பலமான கூட்டணி, திமுக எது வேண்டுமானாலும் பேசட்டும் அதை நீங்கள் நம்பாதீர்கள். விஜய் அவர்களுக்கு எப்போதெல்லாம் கஷ்டகாலம் வருகிறதோ அப்போதெல்லாம் கூட நிற்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான்.சந்தேகமே வேண்டாம் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் விஜய் முன் மொழிவார். குழப்பத்தை உண்டாக்குவார்கள், பயப்படாதீர்கள்" என்றார்.