×

“CM விஜய் அடுத்த பிரதமரா? அவர் முதல்வராக ஆதரவு கடிதம் கொடுத்ததே காங்கிரஸ்தான்”- மாணிக்கம் தாகூர்

 

தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற Mode-இல் இருக்கிறார்கள். அவர்களை மாத்த முடியாது என இன்றைய CM நாளைய PMனு அமைச்சர் ஜெகதீஸ்வரி சொன்ன கருத்துக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “CM விஜய் அடுத்த பிரதமர் என்று அமைச்சர்கள் கூறுவது, அவர்களின் ரசிகர் மன்ற மனப்பான்மையை காட்டுகிறது. தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற Mode-இல் இருக்கிறார்கள். அதனால்டான் ராகுலுக்கு பதிலாக விஜய்யை பிரதமர் என கூறிவருகிறார்கள். அவர்களை மாத்த முடியாது. அவர்களுடைய மனநிலை வேறு, எங்களுடைய மனநிலை வேறு. தவெகவுக்கு எம்.பி.க்கள் கிடைத்த பிறகுதான் இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கும். எம்.பி இல்லாத கட்சியை எப்படி இண்டியா கூட்டணிக்கு கூப்பிடுவது? விஜய் முதல்வராக முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தது காங்கிரஸ்தான். தவெக அமைச்சர்களுக்கு இந்த உண்மை எல்லாம் தெரியும். காங்கிரஸ் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அமித்ஷா கதையை முடித்திருப்பார். தவெகவுக்கு எம்.பி.க்கள் கிடைத்த பிறகுதான் இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கும்” என்றார்.