×

“இந்த முறை அரசியல் குடும்ப பின்னணி இல்லாத புதுமுகங்களுக்கு வாய்ப்பு”- கிரிஷ் ஜோடங்கர்
 

 

நீண்டநாட்களாக எங்கள் கட்சியில் உழைக்கும் சாதாரண காங்கிரஸ்காரர்களுக்கு இந்த முறை அதிகளவில் இடங்கள் வழங்கப்படும் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மாவட்ட அளவிலான தேர்வு முடிந்துவிட்டது. இந்தமுறை புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஏற்கனவே அரசியல் குடும்ப பின்னணி இல்லாத நீண்டநாட்களாக எங்கள் கட்சியில் உழைக்கும் சாதாரண காங்கிரஸ்காரர்களுக்கு இந்த முறை அதிகளவில் இடங்கள் வழங்கப்படும். வழக்கமாக புதுச்சேரியில் காங்கிரஸ் 21 இடங்களிலும், தி.மு.க. 9 இடங்களிலும் போட்டியிடுவது வழக்கம். சில நேரங்களில் கூட்டணி கட்சிகளுக்காக இதில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவது உண்டு. ” என்றார்.