#BREAKING காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு- மீதமுள்ள 12 இடங்களில் நீடிக்கும் இழுப்பறி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என திமுக தலைமை கூறியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் முதற்கட்டமாக, 16 தொகுதிகளின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதனை காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மற்ற 12 தொகுதிகளில் தொடரும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகளில் மீண்டும் 16 தொகுதிகளை பெற்றுள்ளோம். அந்த 16 தொகுதிகளும் கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளாகும்” என்றார்.
1) பொன்னேரி (தனி)
2) வேளச்சேரி
3) சோளிங்கர்
4) ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5) ஈரோடு கிழக்கு
6) உதகை
7) மயிலாடுதுறை
8) அறந்தாங்கி
9) காரைக்குடி
10) சிவகாசி
11) திருவாடனை
12) ஸ்ரீவைகுண்டம்
13) நாங்குநேரி
14) குளச்சல்
15) கிள்ளியூர்
16) விளவங்கோடு