×

குவியும் பாராட்டுக்கள்..!! முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா..!!

 

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியின் முதல் இரு கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் பாபியானோ கரானாவை விட, இந்திய வீரர் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தார்.

இருப்பினும் மீதமுள்ள ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவர் பட்டத்தை வெல்ல வாய்ப்பிருந்தது. இதனால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், ராபிட் சுற்று ஆட்டங்களில் அமெரிக்க வீரர் கரானாவை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா, சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று, முன்னிலை பெற்றார். பின்னர், நடந்த பிளிட்ஸ் ஆட்டங்களை அவர் டிரா செய்தார். இதனால், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இறுதியில், 15-13 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன்மூலம், கிராண்ட் செஸ் டூரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த வின்சென்ட் கீமரை வீழ்த்தி, பிலிப்பைன்ஸ்-அமெரிக்க வீரர் வெஸெலி பார்போஸா வெற்றி பெற்றார்.