குவியும் வாழ்த்து..! எனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்கு: ஜாய் கிரிசில்டா..!
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
திருமண அறிவிப்பை வெளியிட்ட சில மணிநேரத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படம் வெளியிட்டார் ஜாய். கர்ப்பம் குறித்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வந்தார்.மேலும் பெண் குழந்தை வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஆசைப்பட்டார். இந்த குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என்று பெயர் வைத்திருப்பதாக கூறினார் ஜாய் கிரிசில்டா.
இதனிடையே, கடந்த 16-ந்தேதி சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அப்போது, மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜாய் கிரிசில்டா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என நோட்டீசில் ஜாய் கிரிசில்டா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜூக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாங்கள் ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியிருக்கிறோம் என்று மாதம்பட்டி ரங்கராஜின் எக்ஸ் தள கணக்கை டேக் செய்து வழக்கம் போன்று #madhampattyrangaraj என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்துள்ளார் ஜாய் கிரிசில்டா.