குவியும் வாழ்த்துக்கள்..! இவர் தான் தமிழ்நாட்டின் இளம் மந்திரி..!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. கடந்த மே 10ம் தேதி தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அவர் மட்டுமல்லாமல் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சவரையில் புதிதாக 23 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., கமலி பெயரும் இடம்பெற்றுள்ளது.
யார் இந்த கமலி..?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் தான் கமலி. இவர் குருசாமிபாளையத்தில் இயங்கும் கல்வியில் கல்லூரியில் பி.எட் படித்தவர். அதேபோல் ராசிபுரம் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
குடும்பத்தில் இருந்து யாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டதில்லை. முதல்முறையாக அரசியலுக்கு நுழைந்த கமலிக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தார். அதைப் பயன்படுத்தி மக்களிடையே மதிப்பை பெற்று எம்.எல்.ஏ.வானார். அவருக்கு தற்போது அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய வெற்றி குறித்து பேசும்போது கூட, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் கஷ்டங்களை நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த வலியை இனி யாருக்கும் தந்துவிடக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்பட விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார். அவிநாசி தொகுதியைப் பொறுத்தவரை பல அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனை மாற்ற என்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வேன் என நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
அவிநாசி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழாவில் அவர் வாசலில் எம்.எல்.ஏ. என்ற எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் கோலம் போட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதேபோல் அதேபோல் அன்னூர் AM காலனியைச் சார்ந்த மாணவி தர்ஷினி தேவி என்ற மாணவி கல்லூரியில் சேர போதிய கல்வி உதவித்தொகை இல்லாததால் MLA கமலியை சந்தித்து உதவி கோரி மனு அளித்தார் . அடுத்த 12 மணி நேரத்தில் மாணவி இந்துஸ்தான் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்ததும் பாராட்டைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.