பேருந்துக்குள்ளே புகைப்பிடித்த நடத்துநர்! வீடியோ வைரலானதும் நொடியில் பாய்ந்த சஸ்பெண்ட் உத்தரவு!
தூத்துக்குடி அருகே அரசுப் பேருந்தில் பணிக்குச் செல்லும் போது குடிபோதையிலும், பயணிகளின் மத்தியில் வரம்பு மீறி புகைப்பிடித்த அரசுப் பேருந்து நடத்துநர் உடனடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அவர் பேருந்தில் புகைபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அரசு பேருந்தில் புகைபிடித்த நடத்துநர் ஜெயப்பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.தருமபுரி மண்டல பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பேருந்தில் புகைவிட்ட நடத்துநர் சஸ்பென்ட்..! ஓட்டுநரே சம்பவம் செய்த வீடியோ வைரல்..! பணிக்குச் செல்லும் போது குடிபோதையிலும் வரம்பு மீறி புகைப்பிடித்த நடத்துநர்.. பலமுறை எச்சரித்தும் புகைப்பிடித்த காரணத்தினால் அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட ஓட்டுநர்..!! pic.twitter.com/Jw4m5TxjCB
— Arasumedianewsofficial (@Arasumediaoffi) August 13, 2026