×

“நடத்துனர் பணியை பிடுங்கிட்டாங்க; தூய்மை பணி தருவதாக கூறுகின்றனர்”- கண்ணீருடன் நடத்துனர் கதறல்

 

நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் ஜாதிய பாகுபாடு உள்ளதாக தற்காலிக நடத்துநர் தம்பிதுரை கண்ணீருடன் புகார் கூறியுள்ளார். 


அரசுப் பேருந்தில் இருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட தம்பிரை என்ற தற்காலிக நடத்துனர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கதறி அழுது பேட்டியளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையாகப் பணி வழங்கக் கோரியும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் அவர் கண்ணீர் விட்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#NewsReporting | "நடுரோட்டில் வேலை இல்லனு இறக்கி விட்டுட்டாங்க.." கதறி அழுத தற்காலிக நடத்துனர்!

Nellai | Collector | TemporaryConductor #Newstamil24x7 #Conductor pic.twitter.com/Vzycci21u7

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 29, 2026


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடத்தினர், “ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல. நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் ஜாதிய பாகுபாடு உள்ளது. ஜூன் 19ம் தேதி எந்த காரணமும் இன்றி தன்னை பணியில் இருந்து நீக்கினர். தற்காலிக நடத்துநர் பணியை மீண்டும் கேட்டதற்கு தூய்மை பணி தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்” என கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.