அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - நடத்துனர் உயிரிழப்பு..!
Oct 8, 2026, 13:51 IST
திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நடத்துனர் அஜித் மெல்வின் என்பவர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து சேரன்மகாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி பகுதிக்கு வந்தபோது, டிப்பர் லாரி மோதியுள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. ஓட்டுநர்கள் உள்பட காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.