×


மூத்த இதழாளர் குமரேசன் மறைவுக்கு இரங்கல்

 

மூத்த இதழாளர் குமரேசன் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "மூத்த புகைப்படப் பத்திரிகையாளரும் விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞருமான  சு.குமரேசன் நேற்றிரவு மறைந்தார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன்.

விகடன் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். 



தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களின் பல சிறப்பான புகைப்படங்களைப் பதிவு செய்து தந்தவர். அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழப்பாகும். 

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.