×

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்!

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இல்லலூர் செங்காடு பகுதியின் அதிமுக பிரமுகராக இருக்கும் தாண்டவ மூர்த்தி என்பவரை திமுக எம்எல்ஏ இதயவர்மன் தூப்பாக்கியால் சுட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் இதயவர்மன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இதயவர்மன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
இதனிடையே இதயவர்மனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததன் பேரில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, மீண்டும் ஜாமீன் கேட்டு இதயவர்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, இதயவர்மன் துப்பாக்கி தோட்டாக்கள் தயாரிக்கும் ஆலை நடத்தி வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சிறையில் இருக்கும் திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதயவர்மனுடன் கைதான 10 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் கொடுத்த நீதிமன்றம், இதயவர்மன் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இதயவர்மன் வேலூர் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் மற்ற 10 பேர் திருப்போரூர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.