×

இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்..!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகச்சிறந்த வழிகாட்டியுமான தோழர் இரா. நல்லகண்ணு (100) உடல்நிலை நலிவடைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் குணமடைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு, ஆரம்பத்தில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீராபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தோழர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை தற்போதும் பின்னடைவிலேயே இருந்து வருகிறது. மக்களுக்காகப் போராடி வந்த அவர் தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார். மருத்துவர்கள் அவருக்குத் தேவையான தீவிர சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.