×

அடுத்த டார்க்கெட் எஸ்.பி.வேலுமணி! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்ற புகார்

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது எழுந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானது. இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே தனது மீதான புகார் குறித்து விளக்கமளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், “என் மீது நடத்தப்படும் சோதனை என்பது எதிர்
 

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது எழுந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானது. இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே தனது மீதான புகார் குறித்து விளக்கமளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், “என் மீது நடத்தப்படும் சோதனை என்பது எதிர் பார்த்த ஒன்று தான். இதை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன். இதுவரை எனக்கு சொந்த வீடு கிடையாது” எனக் கூறி சமாளித்துவருகிறார்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மீது அதிமுக ஆட்சி காலத்திலேயே டெண்டர் முறைகேடு உள்ளிட்ட பல ஊழல் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, முன்னாள் அதிமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் என்பவர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.