சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் மீது புகார்..!
கஜினி படத்தில் வரும் நடிகர் சூர்யாவைப் போல், வாட்டர்மெலன் சாப்பிடும் காட்சியை ரீகிரியேட் செய்து வெளியிட்டு, அதன் மூலம் இணையத்தில் பிரபலமானவர் திவாகர். அதற்குப் பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டத்தை கொடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் மீது புகார் அளித்துள்ள ஷகீலா, தனது யூட்யூப் பேட்டியில், ஜி.பி. முத்துவின் சமூகத்தை குறிப்பிட்டு அவரைப் பற்றி பேச மறுத்ததோடு, நெல்லை ஆணவப் படுகொலையை தனது சமூகத்தை குறிப்பிட்டு, நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், திவாகரின் பேட்டிகள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளதாக தனது புகாரில் கூறியுள்ள ஷகீலா, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திவாகரின் பேச்சு குற்றமாக கருதப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதனால், திவாகர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.