தவெக ஒன்றிய செயலாளர் மீது புகார்: காவல்துறையின் மௌனம் ஏன்? கேள்வி எழுப்பும் கனிமொழி!
Jul 14, 2026, 10:27 IST
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி, தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.