ரவிசங்கர் மீதான புகார்... இணையத்தில் பரவும் புதிய சிசிடிவி ஆதாரம்
துணை சபாநாயகர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார்த்திக் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி அருந்தும் சிசிடிவி வீடியோவை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
#JustNow || துணை சபாநாயகர் ரவிசங்கர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் திருப்பம்..
— Polimer News (@polimernews) November 10, 2026
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் மது வாங்கச் சென்ற வீடியோ காட்சி வெளியீடு..!#RaviShankar | #TVKMLA | #Thuraiyur | #PolimerNews pic.twitter.com/MMdhIU3IG0
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுமட்டுமின்றி, தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர், குடிமைப்பொருள் விவகாரத்தில் ஒருவரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் தாக்குதலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் நபர் மது அருந்திய காட்சிகள் வெளியாகியுள்ளது. புகார் கொடுத்த கார்த்திக் குமார் டாஸ்மாக்கில் மது அருந்தியதும், எந்த மனுவும் எடுத்துச் செல்லாமல் துணை சபாநாயகர் வீட்டிற்கு சென்ற காட்சியும் வெளியானது