×

சட்டப்பேரவையில் விதிகளை மீறியதாக முதல்வர் விஜய் மீது திமுக உரிமை மீறல் புகார்

 

சட்டப்பேரவையில் விதிகளை மீறியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுகவின் துணைக் கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.


சட்டப்பேரவையில் விதிகளை மீறியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுகவின் துணைக் கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். புகார் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன், அவையில் இல்லாத கலைஞர், முரசொலி மாறன் ஆகியோர் குறித்து விதிகளை மீறி பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது பேரவை விதிக்கு எதிரானது. அவையில் இல்லாத கருணாநிதி, முரசொலி மாறன் குறித்து பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து CM விஜய் மீது திமுக துணை கொறடா கோவி.செழியன் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாக முதலமைச்சர் விஜய் பேசியதாக புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.