"Abortion பண்ணிட்டு வானு அடிச்சுத் துரத்திட்டாரு"- அமைச்சர் மீது பரபரப்பு புகார்
Nov 29, 2026, 15:57 IST
அமைச்சர் வெங்கட்ரமணன் மனைவி மீனாட்சி சைதாப்பேட்டை நீதிமன்றம் 17-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் அமைச்சர் வெங்கட்ரமணன் மீது பரபரப்பு புகரையும் முன் வைத்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் மனைவி, "என்னுடைய 10 வயது பெண் குழந்தையைப் பார்க்கவில்லை, என் குழந்தையைப் பிரிஞ்சு இருக்கேன். எங்க இருக்காங்கனு எனக்கு எதுவும் தெரியவில்லை. கடந்த மார்ச் மாதம் என்னை Abortion பண்ணிட்டு வானு அடிச்சுத் துரத்திட்டாரு; என்னை மிரட்டினாரு! கூப்பிடுறேன்னு சொல்லி சொல்லி ஏமாத்திட்டாரு, போன் செய்தாலும், எதுக்கும் Response இல்ல, நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்கும்னு வந்துள்ளேன்! வீடு இப்போது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு ஜீவனாம்சம் வேண்டும்.