×

விஜய் மீது பாஜக வழக்கறிஞர் பிரிவு புகார்

 

தவெக தலைவர் விஜய், முருகன் பாடலை இழிவுபடுத்தி பாடியதாக கூறி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

null

null

null

null


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். முருகன் பக்தி பாடலை முருக பக்தர்கள் மனம் புண்படும்படியாக இழிவுபடுத்தி பாடியதாக தவெக தலைவர்  விஜய், பொது செயலாளர் ஆனந்த் , ஆதவ் அர்ஜீன்,பாடகர் வேல்முருகன் ஆகியோர் மீது நெல்லை மாநகர காவல் அலுவலகத்தில் இந்துமுன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. "மருதமலை மாமணியே முருகையா" என்ற முருகன் பாடலை இழிவு படுத்தும் விதமாக  பாடியதாக குற்றஞ்சாட்டி, விஜய், பாடகர் வேல்முருகன் மற்றும் பொதுச்செயலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.