“நடிகர் சூரி செய்தது துரோகம்... ஒருத்தர கூட கைத்தூக்கிவிடல”- இயக்குநர் பகீர் குற்றச்சாட்டு
நடிகர் சூரி மீது இயக்குநர் வெற்றிவீரன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பூ காய் கனி திரைப்பட இயக்குநரான வெற்றிவீரன், செய்தியாளர்களிடம் பேசியபோது, சூரி செய்தது நேரடியான துரோகம். கூட இருந்த நண்பர்களில் ஒருவருக்குக் கூட அவர் கைதூக்கி விடவில்லை. இனிமேல் பழசை மறக்கல, அப்படி நடந்துச்சு, இப்படி நடந்துச்சு என்று மேடைகளில் பேசவே கூடாது என்று விமர்சித்தார். மேலும், ஆரம்ப காலத்தில் நாங்கள் சுமார் 20 பேர் ஒன்றாக தங்கி வாய்ப்புக்காக போராடினோம். அந்த 20 பேரில் ஒருவருக்காவது சூரி உதவி செய்தாரா என்றால் பதில் இல்லை. யாருக்கும் அவர் உதவி செய்யவில்லை என்றும் கூறினார். அதோடு, அவருடன் இருந்த நண்பர்களோ, அவருடைய படங்களில் நடித்தவர்களோ அடுத்த கட்டத்துக்கு செல்ல அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். கொடுக்க வாய்ப்பு இருந்தும் கொடுக்காதவன் கெட்ட நண்பன் தான்… சூரி இனிமே நண்பர்களை பற்றியெல்லாம் பேசவே கூடாது என்றும் இயக்குனர் வெற்றிவீரன் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மேடையிலும் ஆரம்ப கால கஷ்டங்களை பற்றி பேசுவார். அதை பார்த்து மக்கள் அவர் பழைய நண்பர்களை மறக்காத நல்லவர் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. நண்பர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. மேடைகளில் மட்டும் பேசிக்கொண்டு நல்ல மனிதர் என்ற இமேஜை உருவாக்கிக்கொள்கிறார் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.