×

வீட்டு பணிப்பெண்களை சிறைபிடித்தாரா நடிகர் ரவி மோகன்?

 

வீட்டில் திருடியதாக கூறி பணிப்பெண்களை நடிகர் ரவி மோகன் சிறைப்பிடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பணிப்பெண்களை நடிகர் ரவி மோகன் சிறைபிடித்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என  கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பணிப்பெண்கள், ஒரு சிறுவன் சிறைபிடிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து நீலாங்கரை போலீசார் சென்று பார்த்தபோது 2 பணிப்பெண்கள் மற்றும் அவரது மகன், ரவி மோகன் வீட்டிற்குள் இருந்துள்ளனர். போலீசார் இதுகுறித்து விசாரித்த போது, வீட்டில் பணிப்பெண்கள் திருடி விட்டதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. சட்ட விரோதமாக விசாரிக்க கூடாது, காவல்துறையிடம் முறையாக புகாரளிக்குமாறு ரவி மோகன் தரப்பிடம் போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.