×

மெட்ரோ ரயிலுக்குள் சிக்கிய பயணிகள்! கதவுகள் திறக்க முடியாததால் மக்கள் பீதி..! 

 

விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி சென்ற மெட்ரோ ரயிலில் திடீர் தொழில்நுட்ப கோளாறு. ரயில் கதவுகள் திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், வழக்கம்போல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. அதில் விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி சென்ற மெட்ரோ ரயில், திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்றது.

பொதுவாக, ரயில் நிலையத்தில் நின்றதும் மெட்ரோ ரயில்களின் கதவுகள் திறக்கப்படும். ஆனால், மேற்குறிப்பிட்ட ரயிலில் திடீரென கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். மெட்ரோ ரயிலின் கதவுகள் சுமார் 15 நிமிடங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் மெட்ரோவில் இருந்து தேரடியில் இறங்குவதற்கும், தேரடி ரயில் நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் வரை செல்வதற்கான பயணிகளும் கடும் சிரமம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மெட்ரோ ஊழியர்கள் பழுதான கதவை சரிசெய்தனர். இதையடுத்து மெட்ரோ ரயில் கதவுகள் திறந்தது. இதையடுத்து, பயணிகள் ரயிலில் இருந்து வெளியேறினர். சுமார் 30 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் மீண்டும் மீனம்பாக்கம் நோக்கிப் புறப்பட்டது. இதனால் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள், சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#WATCH | திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையத்தில் ரயில் நின்றபோது 15 நிமிடங்களுக்கு கதவுகள் திறக்காததால் பயணிகள் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் தவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மெட்ரோ ஊழியர்கள் பழுதான கதவை சரி செய்து பயணிகளை வெளியேற்றினர்#metrotrain #metrodoorpic.twitter.com/hbU6QfuIdo

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 13, 2026