இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் - ஈபிஎஸ் கண்டனம்
Oct 28, 2023, 11:48 IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் , சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் , சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். இந்த விடியா திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் #இந்தியகம்யுனிஸ்ட்கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.