இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு..!!
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்.,6ம் தேதி நடைபெற உள்ளது. தவெக, திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தன.இந்நிலையில், அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் வட்டாரச் செயலாளர் இலட்சுமணனும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
சென்னையில் நேற்று மாலையில் வேட்பாளர்களை அறிமுகம்செய்து, சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐஎம் பெ.சண்முகம், சிபிஐ எம்எல் லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் பேசினார்கள்.
இடது முன்னணி இவர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று மூன்று தலைவர்களும் தெரிவித்தனர்.