×

டிச.2 முதல் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு!

முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் அலை 2ஆம் கட்டத்தில் உள்ளதால் கல்வி நிறுவனங்கள் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களின்
 

முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் அலை 2ஆம் கட்டத்தில் உள்ளதால் கல்வி நிறுவனங்கள் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் முதுநிலை வகுப்பு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இதற்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அத்துடன் இதர கல்லூரி வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.