×

‘பசித்தால் எடுத்துக் கொள்ளுங்கள் பணம் வேண்டாம்’ : மக்களின் பசியாற்றும் கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் வேலை இழந்தோருக்கும் சாலையில் வசிப்போருக்கும் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக ஆர்வலர்கள் பலர் உணவு விநியோகம் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளனர். சில கல்லூரி மாணவர்களும் இலவசமாக உணவு விநியோகம் செய்து மக்களின் பசியாற்றி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் தினமும் 400 பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் வேலை இழந்தோருக்கும் சாலையில் வசிப்போருக்கும் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக ஆர்வலர்கள் பலர் உணவு விநியோகம் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளனர். சில கல்லூரி மாணவர்களும் இலவசமாக உணவு விநியோகம் செய்து மக்களின் பசியாற்றி வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் தினமும் 400 பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் வெறும் 15 பொட்டலங்கள் மட்டுமே வழங்கி வந்த மாணவர்கள் தற்போது பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உதவியுடன் 400 பேருக்கு உணவு அளித்து வருகின்றனர். தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளும் விதமாக, தங்களது கல்லூரி வாசலில் பிரியாணி பொட்டலத்தை தண்ணீர் பாட்டிலுடன் அடுக்கி வைத்துள்ளனர்.

‘பசித்தால் எடுத்துக் கொள்ளுங்கள் பணம் வேண்டாம்’ என்ற பெயரில் இந்த சேவையை செய்து வருவதாக கூறிய புதுக்கல்லூரி மாணவர் சங்க தலைவர், பிபிய் கிட் அணிந்து மிகப் பாதுகாப்பாக உணவு வழங்கி வருவதாகவும் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.