கல்லூரி மாணவர்கள் மட்டுமே குறி... வாடகை வீட்டில் இளம்பெண்களை வைத்து...
சென்னை நெற்குன்றம் கோல்டன் ஜார்ஜ் நகர், எட்டியப்பன் தெருவிலுள்ள அந்த குறிப்பிட்ட வீட்டிற்குள் பல கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர்கள் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதையடுத்து, நெற்குன்றம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வீட்டிற்கு மட்டும் அடிக்கடி இளைஞர்கள் வந்து சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 55 வயதான பாலியல் புரோக்கர் ராஜா என்பவர், 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானது.
இதையடுத்து, ராஜாவை சுற்றி வளைத்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.. அப்போது, நெற்குன்றம் பகுதியை சுற்றி அதிகளவில் என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளதால், அந்த பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்து வந்ததாகும், என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை குறிவைத்தே, இந்த பாலியல் தொழில் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, இதற்காகவே தனியாக வாட்ஸ் அப் குரூப் அமைத்து, இளம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் புரோக்கர் ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பாலியலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.