×

’’நீ அவன வெட்டினாலோ அவன் உன்னை வெட்டினாலோ கேட்க மாட்டோம்’’-கல்லூரி மாணவி தற்கொலையில் மெத்தனம் காட்டிய போலீசை கண்டித்து போராட்டம்

கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென கூறிய காவல் ஆய்வாளரை கண்டித்து சமயபுரம் காவல்நிலையத்தினை 100க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம்,சமயபுரம் அருகே நெய்குப்பை கிராமத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்த பெற்றோரை ஏளனமாக பேசிய, நடவடிக்கை எடுக்க முடியாதென கூறிய சமயபுரம் காவல் ஆய்வாளர் அன்பழகனை கண்டித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தினை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமயபுரம் அருகே நெய்குப்பை கிராமத்தில் வசிப்பவர் குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஆர்த்தி (20). சமயபுரம் பகுதியில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் பையோ மெடிக்கல் பாடத்தில் இறுதி ஆண்டு கல்வி பயின்று வருகிறார். மாணவி ஆர்த்தி வீட்டின் அருகே,சுந்தர் – சுதா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதிற்குட்பட்ட குழந்தை உள்ளது. அந்த குழந்தையினை மாணவி ஆர்த்தி கடந்த 2 ம் தேதி தூக்கி கொஞ்சியுள்ளார். ஏற்கெனவே ஆர்த்தி குடும்பத்தினருக்கும் , சுந்தர் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் குழந்தையினை தூக்கி கொஞ்சியதால், சுந்தர் மனைவி சுதா ஆர்த்தியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். சுதாவுக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் மலர்கொடி, சாந்தி , கலியசுந்தரம் உள்ளிட்ட 5 பேர் கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஆர்த்தி செப்டம்பர் 2 ம் தேதி வீட்டிலிருந்த விஷத்தினை எடுத்து குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். மாணவியின் தாய் செல்வம் , தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், கொரோனா காலத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். ’’நீ அவன அரிவாளால் வெட்டினாலோ, அவன் உன்னை வெட்டினாலோ நடவடிக்கை எடுக்க மாட்டோம்’’ என ஏளனமாக பேசிய காவல் ஆய்வாளர் அன்பழகனை கண்டித்தும், புகார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் சமயபுரம் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஸ்ணன், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், காவல் ஆய்வாளர் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர்.
 

கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க முடியாதென கூறிய காவல் ஆய்வாளரை கண்டித்து சமயபுரம்  காவல்நிலையத்தினை 100க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
           திருச்சி மாவட்டம்,சமயபுரம் அருகே நெய்குப்பை கிராமத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்த பெற்றோரை ஏளனமாக பேசிய, நடவடிக்கை எடுக்க முடியாதென கூறிய சமயபுரம்  காவல் ஆய்வாளர் அன்பழகனை கண்டித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தினை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம் அருகே நெய்குப்பை கிராமத்தில் வசிப்பவர் குமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஆர்த்தி (20). சமயபுரம் பகுதியில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் பையோ மெடிக்கல் பாடத்தில் இறுதி ஆண்டு கல்வி பயின்று வருகிறார். மாணவி ஆர்த்தி வீட்டின் அருகே,சுந்தர் – சுதா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதிற்குட்பட்ட குழந்தை உள்ளது. அந்த குழந்தையினை மாணவி ஆர்த்தி கடந்த 2 ம் தேதி தூக்கி கொஞ்சியுள்ளார்.

ஏற்கெனவே  ஆர்த்தி  குடும்பத்தினருக்கும் , சுந்தர் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் குழந்தையினை தூக்கி கொஞ்சியதால், சுந்தர் மனைவி சுதா ஆர்த்தியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். சுதாவுக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் மலர்கொடி, சாந்தி , கலியசுந்தரம் உள்ளிட்ட 5 பேர் கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஆர்த்தி செப்டம்பர் 2 ம் தேதி வீட்டிலிருந்த விஷத்தினை எடுத்து குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

 மாணவியின் தாய் செல்வம் , தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், கொரோனா காலத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்.  ’’நீ அவன அரிவாளால் வெட்டினாலோ, அவன் உன்னை வெட்டினாலோ நடவடிக்கை எடுக்க மாட்டோம்’’ என ஏளனமாக பேசிய காவல் ஆய்வாளர் அன்பழகனை கண்டித்தும், புகார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் சமயபுரம் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.


    சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஸ்ணன், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், காவல் ஆய்வாளர் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர்.