டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு
தாம்பரம் அருகே கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.
சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்து வந்த பாலகாடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யா சில நாட்களாக காய்ச்சலால பாதிக்கபட்டு வந்தவர் மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார் ,நேற்று அதிக அளவில் காய்சலால் மாணவி பாதிக்கபட்டதால் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்த போது 7 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் நான்கு மாணவர்கள் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் மற்ற மூன்று மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிகிச்சைக்காக்ல் சென்றுள்ளனர்.
இதனையடுத்து டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பவதற்காக உடனடியாக கல்லூரி நிர்வாகம் பத்து நாட்கள் விடுமுறை அளித்து மாணவர்களை வெளியேற்றியது. இது வரை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக கல்லூரி சுற்றியுள்ள அபப்குதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்சல் பரவாமல் தடுப்பதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.