×

முதலை கடித்து கல்லூரி மாணவன் பலி!

 

செங்கம் அருகே முதலை கடித்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்து உள்ள சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் முனீஸ்வரன் (வயது 18). இவர் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை நண்பர்களுடன் சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான புளியங்குளம் என்ற பகுதியில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலை ஒன்று முனீஸ்வரன் வலது காலில் கடித்து தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. கதறிய முனீஸ்வரனின் குரலை கேட்டு நண்பர்கள் தண்ணீரில் நீந்தி சென்று முனீஸ்வரன் கதறிய இடத்தில் தேடி உள்ளனர். தண்ணீரில் முழுகிய நிலையில் இருந்த முனீஸ்வரனை தரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது முனீஸ்வரன் உயிர் எழுந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனை அடுத்து உறவினர்களுக்கும் சாத்தனூர் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் முனீஸ்வரனின் உடலை கைப்பற்றிய சாத்தனூர் காவல்துறையினர் திருவண்ணாமலை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பமும் குறித்து  காவல்துறையினர் அவருடன் சென்றவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.