#BREAKING கோவை மாணவி வன்கொடுமை- 3 பேரை சுட்டு பிடித்த போலீஸ்
கோவை மாணவி வன்கொடுமை சம்பவத்தில் 3 பேர் பிடிபட்டனர்.
கோவையில் தனியார் விடுதியில் தங்கி, உயர்கல்வி பயின்று வரும் 21 வயது கல்லூரி மாணவி, நேற்று முன் தினம் (02.11.2025) இரவு கோவை விமான நியைத்திற்கு பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளர். பிருந்தாவன் நகர் பகுதியில் தனது ஆண் நண்பருடன் காருக்கு உள்ளே பேசிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அங்கு ஆயுதங்களுடன் வந்து, காரை உடைத்து, ஆண் நண்பரை சரமாரியாக வெட்டி விட்டு, மாணவியை கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் தாக்குதல் நடத்தி, மூர்ச்சடைந்த நிலையில், உடலை போட்டுவிட்டு தப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் பிடிக்க முயற்சித்த போது அவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் துடியலூர் அருகே சுட்டு பிடித்தனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்தி காளிஸ்வரன் ஆகியோருக்கு காலில் குண்டடிபட்டது. தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஃ