பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர் - கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர்
கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூவரை சுட்டு பிடித்த போலீசார், அப்போது நடந்தது என்ன.? என காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், “கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். சுமார் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடித்தோம். கைது செய்யப்பட்ட மூவரும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அல்ல. கைது செய்யப்பட்ட மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. மாணவியை சுவருக்கு பின்னால் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை. மூவரையும் நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
கோவையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. தனிமனித உரிமைக்கு முக்கியவத்துவம் அளித்து பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்கக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் காவலர் செயலியை பயன்படுத்துங்கள். கோவை மாணவி பாலியல் வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.