×

கோவை சிறுமிக்கு நடந்ததை கதறி துடித்து சொன்ன தாய் -  தாய் கண்ணீர் மல்க பேட்டி..!

 

கோவை அருகே கடத்திக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடற்கூறு ஆய்வு (Post-mortem) தற்போது நிறைவடைந்துள்ளது.கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறுமியின் உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) செய்து முடிக்கப்பட்டது.

மருத்துவமனை நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சிறுமியின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும், விசாரணையை முடுக்கிவிடவும் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அவசரமாகக் கோவைக்கு விரைந்துள்ளார்.

இந்நிலையில் அன்று மாலை என்ன நடந்தது என அந்த சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேசினார். 

மாலை 5 மணி அளவில், "அம்மா நான் கடைக்குச் சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டுத்தான் என் மகள் வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

கடைக்குச் சென்ற என் மகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, ஆசை வார்த்தை கூறி அவளைத் தங்களோடு அழைத்துச் சென்றுள்ளனர். மகளை அப்படி அழைத்துச் சென்றவர் வேறு யாருமல்ல; எங்கள் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்து, அண்மையில்தான் வீட்டை காலி செய்துவிட்டுச் சென்ற நபர்.

கடைக்குச் சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் நாங்கள் பதற்றமடைந்து அவளைத் தேடத் தொடங்கினோம். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், என் மகளை அழைத்துச் சென்றது யார் என்ற உண்மை எங்களுக்குத் தெரியவந்தது.

எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், என் மகளைக் கடத்திக் கொலை செய்த அதே நபர், ஒன்றும் தெரியாதது போல எங்களுடன் சேர்ந்துகொண்டு என் மகளை தேடும் நாடகமாடியுள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/MVBUe5ueBNQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/MVBUe5ueBNQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">