×

கோவை கங்கா மருத்துவமனை நிறுவனர் ஜே.ஜி. சண்முகநாதன் மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் மறைவு 

 

கோவை கங்கா மருத்துவமனை நிறுவனர், டாக்டர் திரு. ஜே.ஜி. சண்முகநாதன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், கோவை கங்கா மருத்துவமனை நிறுவனர், டாக்டர் திரு. ஜே.ஜி. சண்முகநாதன் அவர்கள் காலமான தகவலறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.

கோவையின் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மயக்கவியல் நிபுனர் என்ற பெருமையை பெற்ற இவர், மருத்துவ உலகில் பல சாதனைகளைப் படைத்து, தனக்கென தனி முத்திரையை பதித்தவர். டாகடர் திரு. ஜே.ஜி. சண்முகநாதன் அவர்களின் மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், மருத்துவ உலகிற்கே பேரிழப்பாகும்.



அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவத்துறை நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.