"முதல்வர் விஜய்யின் 'மாஸ்' இந்தத் தேர்தலில் கை கொடுக்காது!" - ஆர்.பி.உதயகுமார் அதிரடி!
முன்னாள் அமைச்சர் ஆர் .பி உதயகுமார் கூறியுள்ளதாவது,
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை அலை வீசுவதை நேரில் காண்கின்றபோது, எல்லையெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது.தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்ற ஒவ்வொரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் புதிய உற்சாகமும், புதிய நம்பிக்கையும், பிறந்திருக்கிறது. வெற்றி முகம் நோக்கி எடப்பாடியார் தலைமையில் தாராபுரம் தேர்தல் களம் சென்று கொண்டிருப்பதை இன்றைக்கு அதிமுகவின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சாமானியரான கழகத்தின் வெற்றி வேட்பாளர்பானுமதி தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிக்க செல்லுகின்ற இடங்களெல்லாம் மக்கள் உற்சாகத்தோடு அவர்களை வரவேற்பதை அந்த காட்சிகள் எல்லாம் நம் கண்முன்னால் காண முடிகிறது.
இதுவே இரட்டை இலையின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் 27,28, ஆகிய 2 நாட்களில் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்காளர்களை சந்திக்கிறார்
இந்த காட்சிகள் எல்லாம் ஒருபுறம் எழுச்சியோடு நடைபெறுகிறபோது, மறுபுறத்தில் தவெக பொறுப்பேற்று இந்த நான்கு மாதங்களில் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற ஒரு விதமான அதிர்ச்சியை இன்றைக்கு தேர்தல் களத்தில் நம்மால் உணர முடிகிறது. அதனால்தான் தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு சேகரிக்க செல்லுகிற இடங்களில் எல்லாம் வாக்காளர்கள், விவசாயிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதனால் தவெக வேட்பாளர் சத்தியபாமா பல இடங்களிலே பிரச்சாரத்தை பாதியிலே முடித்துக்கொண்டு செல்கிறார்
தவெக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய சென்றபோது, அங்கே பெருந்திரளாக திரண்டிருந்த பிஏபி பாசன விவசாயிகளும் மற்றும் அந்த பகுதியினுடைய பொதுமக்களும் சத்தியபாமா தவெக வேட்பாளரை ஓட்டு கேட்டு வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் இன்றைக்கு தமிழகம் முழுவதும் ஊடகங்கள் மூலமாக வெளியாகி இருக்கிறது.
தவெக வேட்பாளராக போட்டியிடுகிற சத்தியபாமா கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்த மக்களுக்கும், அவரின் வெற்றிக்காக உழைத்த கட்சிக்கும், அவருக்கு நம்பிக்கையோடு வாய்ப்பளித்த தலைமைக்கும் நம்பிக்கை மோசடி செய்ததோடு, சத்தியபாமா செய்த பச்சை துரோகத்தை தாராபுரம் தொகுதியின் வாக்காளர்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை சத்தியபாமா செல்லுகிற இடங்கள் எல்லாம் எழுகிற அந்த எதிர்ப்பு அலையே சாட்சியாக அமைந்திருக்கிறது..
விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாததும் ,பிஏபி விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படாததும், கடுமையான மாநிலம் முழுவதும் ஏற்பட்டிருக்கிற மின்சார வெட்டும் மின் தடையும், தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வு ,
சட்டம் ஒழுங்கு சீர்கேடும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதும், குறிப்பாக தேர்தல் நேரத்தில் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் அக்கறையோடு செயல்படுத்தவில்லை என்பதும் அதிலும் பெண்களுக்கு 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்காததும், அதைப்போல முதியோர் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்குவதற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்காததும், அதோடு இன்றைக்கு நான்கு மாத காலத்திலே 40,000 கோடி கடன் வாங்கி இருப்பதும் இப்படி தவெகஅரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய அனுபவ குறைவால் தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் மீது இருக்கிற அந்த முழுமையான அக்கறையை உறுதி செய்கின்ற வகையில் இதுவரை ஒரு புதிய திட்டங்களை கூட அறிவிக்காமல், ஏற்கனவே அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த அம்மா அரசின் திட்டங்களுக்கு பெயரை சூட்டி விழாவை நடத்துவதோடு அவர்கள் கடமை முடிந்ததாக நினைக்கின்றார்கள்.
ஆகவே நீதியை நிலைநாட்டிட, நியாயத்தை தர்மத்தை காத்து இன்றைக்கு தாராபுரம் தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு களத்தில் அண்ணா திமுக முன்னேற்றக் கழக விசுவாசத் தொண்டர்கள் எடப்பாடியாரின் அவருடைய தலைமையில் பணியாற்றுகிறார்கள்.
இன்றைக்கு இதையெல்லாம் தாண்டி இந்த இடைத்தேர்தலில் முதல்வர் விஜயின் மாஸ் இந்த தேர்தலில் தவெகவிற்கு கை கொடுக்க வாய்ப்பே இல்லை என்கிற களநிலவரம் தான் இன்றைக்கு நமக்கு வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் விஜயின் முகத்தை ஒருமுறை காட்டினால் போதும் தவெகவுக்கு வெற்றி உறுதி என்ற நிலையிலே இருந்து சற்று கீழே இறங்கி வந்து தெருத்தெருவாக வீதி வீதியாக முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தாலாவது, ஆளுங்கட்சிக்கு எதிராக ஏற்பட்டிருக்கிற அதிர்ச்சியை சரிகட்டி தவெகவின் வெற்றியை உறுதி செய்திட முடியுமா என்ற கேள்வியின் அடிப்படையில் தான் ஒவ்வொரு தொகுதிக்கும் முதல்வர் விஜய் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக நாட்களை ஒதுக்கி இருப்பதை களத்தில், தவெகவுக்கு ஏற்பட்டிருக்கிற பின்னடைவும், தேர்தல் களத்திலே தவெகவிற்கு ஏற்பட்டிருக்கிற சவால்களும், தவெகவிற்கு ஏற்படப்போகிற சறுக்கல்களையும் இது சரிகட்ட முடியுமா முதல்வர் விஜயின் மாஸ் பிரச்சாரம் என்ற நம்பிக்கையோடு தவெக தொண்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.