×

முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு 'A' சான்றிதழ்; ரிலீஸ் எப்போது?

 

முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜன., 9ம் தேதி படம் வெளியாக வேண்டியது. தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்து விட்டதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு 'ஏ' சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கி உள்ளது. இதனால் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சான்றிதழ் வழங்கப்பட்டதாக கடந்த வாரமே தகவல்கள் வெளியாகின. எனினும், தணிக்கை வாரியம் இப்போது தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


திரைப்படங்களுக்கு 'A' சான்றிதழ் எதற்காக?

A (Adults Only) சான்றிதழ் என்பது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அந்த திரைப்படத்தைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

திரைப்படத்தில் அதிக வன்முறை, ரத்தக் காட்சிகள், ஆபாச வசனங்கள், பாலியல் சார்ந்த காட்சிகள் அல்லது சிறுவர்களுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கம் இருப்பதாக தணிக்கை வாரியம் கருதினால், அந்தப் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்படும்.

A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, பெற்றோருடன் வந்தாலும் கூட, 18 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; இதற்கு விதிவிலக்கு கிடையாது; வயதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை திரையரங்க நிர்வாகம் கேட்கும் அதிகாரமும் உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு தளங்களிலும் "Adults Only" என் ற எச்சரிக்கை இடம்பெற வேண்டும்; விதிமுறைகளை மீறினால், திரையரங்குகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம்.

முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் (CBFC) A (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது.