×

#BREAKING காங்கிரஸ்க்கு எம்பி சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவிப்பு
 

 

தமிழகத்தில் காலியாகவுள்ள ஒரு ராஜ்யசபா இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தவெக அறிவித்துள்ளது.

 

இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.  ராஜ்யசபா சீட் தொடர்பாக சற்றுமுன் முதல்வர் விஜய்யை கிரிஷ் சோடங்கர், ப.சிதம்பரம் என காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கையை விடுத்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கோரிக்கையை  ஏற்று தவெகவின் முதல் ராஜ்யசபா இடத்தை காங்கிரஸ்க்கு ஒதுக்கினார் முதல்வர் விஜய்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். இவர் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சி.வி. சண்முகம் பதவி விலகியதால் காலியாக உள்ள இடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.