×

ஜூன் 22-ல் CM விஜய்யின் 52-வது பிறந்தநாள்: இந்த முறை காத்திருக்கும் செம்ம ‘சர்ப்ரைஸ்’..!!

 
தமிழக முதல்வர் விஜய், வரும் 22-ந் தேதி தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நீண்ட பல காலமாக நடிகராக பிறந்த நாளை கொண்டாடிய அவர், முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது.
அதனால், இந்த முறை பிறந்த நாளை வித்தியாசமாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, வியாசர்பாடி பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் தயாராகிவருகிறது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்தை, தனது பிறந்த நாளான வரும் 22-ந் தேதி திறக்க திட்டமிட்டுள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தொகுதி மக்களுடனேயே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடவும் முடிவு செய்துள்ளாராம்.
மேலும், மாதந்தோறும் குறிப்பிட்ட ஒரு நாளை, தொகுதி மக்களுக்காக செலவிடவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளாராம். அன்றைய தினம் தொகுதி மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அதன் மீது விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.