☰
×

அமைச்சர் காந்திராஜ் நள்ளிரவு காவல் நிலைய ஆய்வால் வெடித்த புதிய சர்ச்சை- விஜய் எச்சரிக்கை 

 

அரக்கோணம், தக்கோலம் காவல் நிலையங்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் நள்ளிரவில் அதிரடி ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. பதிவேடுகளை புரட்டி பார்த்தது, “ஏன் யூனிஃபார்ம் அணியவில்லை?” என்று கேள்வி கேட்டது, பெண் போலீஸ் ஒருவரின் செல்போனை சோதித்ததாக கூறப்படும் சம்பவம் என அத்தனையும் ரீல்ஸாக வெளியிடப்பட்டு சமூக வலைதளத்தில் பரபரப்பை கூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு காவல்துறையை ஆய்வு செய்ய அதிகாரம் உண்டா? காவல்துறை முதல்வர் விஜய்யின் உள்துறையின் கீழ் இருக்கும்போது இந்த தலையீடு சரியா? என்று அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.  இந்த விவகாரம் டிஜிபி காதுக்கும் சென்றதாகவும், ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் பேசப்பட்டதாகவும் தகவல் பரவுகிறது. நிர்வாக விதிமுறைகளை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய்க்கு கடிதம் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதில் “ஒதுக்கப்பட்ட துறையை தாண்டி மற்ற துறைகளில் தலையிடுவது நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்!”என சொல்லப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய் போனில் தொடர்புகொண்டு காந்திராஜுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.  “உங்கள் துறை பிரச்சினைகளை பாருங்கள், எல்லை தாண்டி மற்ற விஷயங்களில் தேவையற்ற தலையீடு செய்யாதீர்கள்!” எனக் கூறியுள்ளார். இதனிடையே தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவையொட்டி இரண்டாவது நாளாக அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் முதல்வர் விஜய் நேரில் வந்திருந்தார். அப்போது அமைச்சர் காந்திராஜும் அங்கிருந்ததாகவும், அருகில் சென்று வணக்கம் சொல்லவும் பேசவும் முயன்ற அமைச்சரிடம் முதல்வர் விஜய் முகம் கொடுத்து பேசவில்லை என்று தவெகவினர் வட்டாரத்தில் தகவல் பரவுகிறது.